நெஞ்சு பொறுக்குதில்லையே!

நெஞ்சு பொறுக்குதில்லையே!

பச்சிளம் பாலகர்கள்
பள்ளி அறமறந்து,
கடும் உழைப்பதனில்,
இளம் வயததனை,
இழப்பது நோக்கி நம்,
நெஞ்சு பொறுக்குதில்லையே!

மழையதனை எதிர்நோக்கி,
விதையதனை நன் விதைத்து,
கரு மேகங்கள் வரமறுக்க,
நிலமதுவும் வெடித்தழிய,
உழவன் விடமருந்தி,
மடிவது நான் கண்டு,
நெஞ்சு பொறுக்குதில்லையே!

வாக்குறுதி பல அளித்து,
பதவியது பற்றியபின்,
நன்முறை அறமறந்து,
ஊழலதில் அவர் திளைக்க,
இன்றைய அரசியலை நினைத்து,
நெஞ்சு பொறுக்குதில்லையே!

செல்வமே குறியென,
சுற்றாரை அறவே மறந்து,
விவேகமற்ற வாழ்க்கையதை,
வாழும் மக்களை நினைத்து,
நெஞ்சு பொறுக்குதில்லையே!

கற்பதனை தான் விற்று,
மருத்துவ செலவு ஈற்று,
கணவனின் உயிர் காத்த,
பெண்மணியின் கதறல் கேட்டு,
நெஞ்சு பொறுக்குதில்லையே!

சம்ப

எழுதியவர் : சம்பத் கல்கத்தா (16-Aug-11, 8:46 pm)
சேர்த்தது : sampath kolkata
பார்வை : 327

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே