காற்று

காற்று

நறுமணத் தென்றலாய் நாளும் நீ தவழ்ந்து
நல்லுயிர் பலவற்றை நித்தம் நீ காத்தனை
இதமாய் வீசியே நீ இன்னல் பல போக்கி
இதயத்தை வருடியே இன்பமழை பொழிந்திட்டாய்!

கடும் சீற்றம் கொண்டதேனோ?
காலனாய் மாறி நீ கடுகளவும் இரக்கமின்றி
சூறாவளியாய் சீற்றம் கொண்டதேனோ?
வார்த்தா புயலென்ற புதுநாமம் பெற்று நீ
வாட்டி உயிர்வதைகள் பல புரிந்ததும்தானேனோ?

எத்தனை எத்தனை உயிர்ச்சேதம்
எத்தனை எத்தனை பொருட்சேதம்
ஏனிந்த சீற்றம் நீ கொண்டனை இன்தென்றலே!
புவியோர்தம் தன்னிலை மறந்து தட்டுத்தடுமாறி
அறவழி நீங்கியே அதர்மம் ஏகியதால்
வந்தவினை இதுவோ?

வாடக்காற்றாய் நீ கோடயிலும் குளிரூட்டி
வசந்தமலர்ப் பந்தலிலே இன்னிசை மீட்டதனை மறக்கலாமோ?

வருவாய்த் தென்றலே! புதுப்பொலிவாய் இப்புவியில்
தவிர்ப்பாய் சீற்றத்தை வாழ்விப்பாய் இன்னுயிர்களை.

எழுதியவர் : ஸ்ரீ vijayalakshmi (17-Jul-18, 7:20 pm)
Tanglish : kaatru
பார்வை : 485

மேலே