தேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி 18

" மனித வடிவில் வந்தவரெல்லாம் மனிதரா?
கண் இருக்கு,
மூக்கு இருக்கு.
வாய் இருக்கு,
காது இருக்கு,
இவையெல்லாம் மலம் தின்னும் பன்றியிடம் கூட இருக்கு.
நீ யார் என்று சொல் நெஞ்சே! "

ஆஹா! காற்றில் கலந்த மென்மையான கானம்!
பாடியது யார்?
அதோ ரோட்டோர வானம்பாடிக்கூட்டம்.

என்ன அருமையான பாடலைப் பாடுகிறார்கள்!
வியந்து கொண்டே காலை நேர நடைபயிற்சிக்காக சென்று கொண்டிருந்தார் ஏசிபி ஜெகன்.

எதிரே பாட்டுப்பாடிக் கொண்டே தாளமிட்டபடி ஆட்டம் ஆடி வந்தார் காவி ஆடையில் ஒரு சன்னியாசி.

" வாகனங்களில் விரையும் மக்களே!
நீங்கள் சோம்பேறிகளாவதை உணர்ந்தீர்களா?
சுவாசக் காற்றிலே விசம் கலக்க நீங்க வாழும் வாழ்க்கை முறையும் சரிதானோ?
அடுக்கடுக்காய் கட்டிடங்கள்,
நிலத்தடியிலே ஒரு அடுக்கு அசைந்தாலே தாக்குப்பிடிக்குமோ?
நாகரீகம் என்ற நாயை போன்ற இல்லற வாழ்வில் ஈடுபடும் உங்களுக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர் இல்லற நோன்பின் மகத்துவம் தெரியுமோ? "

ஆஹா! வேதபுரத்தில் நுழைந்தார் போலே உணர வைக்கும் ஞான கானம்!

புன்னகை பூத்திடவே ஜெகன் மனம் மகிழ்ந்திடவே உண்மை உணர்ந்தாய் ஆழ்மனம் கூத்தாட வேகமாய் வீடு நோக்கி விரைந்தார்.

அங்கு காலை சிற்றுண்டி முடிந்த பின்னர் சிவா, அசோக், இராகவன் ஆகியோர் வர, ஜெகன் அவர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஆலோசனை முடிய காலை உணவு தயாராக இருக்க, அனைவரும் ஒன்றாக உணவருந்திவிட்டு ஜெகனிடம் விடைபெற்றுக் கொண்டு சிவாவும், இராகவனும் கிளம்பினார்கள்.
அசோக் ஜெகனின் குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது அவனது கைபேசி அதிர்ந்தது.
எடுத்து காதில் வைத்தான்.
மறுபக்கம் பேசியவள் அதிஃபா தான்.
வீட்டிற்கு வரும்படி கூறினாள்.

அசோக் வீடு திரும்பினாள்.
அங்கு அதிஃபா, நந்தினி, சித்ரா இருந்தார்கள்.
அவர்களிடம், " எதற்காக உடனே வரச் சொன்னீங்க? ",என்று கேட்க, சித்ரா, " சிவா அண்ணா உங்க கூட வரவில்லையா? ", என்றிட அதற்கு அசோக், " அண்ணன் முக்கியமான வேலையா பொயிருக்காங்க. வர நாட்கள் ஆகும். ", என்றிட, " அச்சச்சோ! உங்க இரண்டு பேருக்காகவும் தானே ஏற்பாடு செய்திருந்தோம்! ",என்று நந்தினி வருந்தமுற்றாள்.

" என்ன ஏற்பாடு? ",என்று அசோக் கேட்க, " இன்னைக்கு தான் நீங்க ரெண்டு பேரும் பிறந்த நாள். அதான் பிறந்த நாள் கொண்டாட ஏற்பாடு செய்தோம். பரிசுகள் கூட தயாராகிவிட்டன. ",என்றிட, " அப்படியா! ",என்று வியப்புடன் கூறிவிட்டு சிவாவிற்கு கால் செய்து அழைத்தான்.
ஆனால், சிவா தான் முக்கியமான பயணத்தில் இருப்பதால் வர இயலாது என்று கூறிவிட்டான்.

அதனால் வீடியோ கால் மூலமாக பிறந்தநாள் கொண்டாட்டம் முடிக்க வேண்டியதாயிற்று.
சிவா இரயில் பயணத்தில் சிறிது நேரம் தூங்கினான்.

அன்றாட வாழ்க்கையை எண்ணி பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான் இராகவன்.
பிறகு ஏதேச்சையாக திரும்பினான்.
ஜன்னலோரம் அசந்தே போனான்.

அங்கே அமர்ந்திருப்பது அவளே தான்.

இராகவன் கல்லூரி படிக்கும் போது அடிக்கடி அவளைப் பார்த்திருக்கிறான்.
அவளிடம் பேசியதில்லை.
அவள் பெயர் கூட தெரியாது.

அவள் இப்போது இரயில் இருக்கையில் அமர்ந்து காதில் ஒலிப்பான்கள் (ஹெட்செட்) மூலம் பாடல்களைக் கேட்டுக் கொண்டு கண்களை மூடி ஜன்னலோரத் தென்றலை இரசித்துக் கொண்டு வந்தாள்.
திடீரென இரயிலில் சிறிது குலுங்கல் தோன்ற கண் திறந்து பார்த்தாள்.

இரயில் கூட்டம் இல்லை.
சாயங்காலம் என்ற பதில் மேற்கே மறையும் கதிரவன் காட்டிக் கொண்டிருந்தான்.

அப்போது தான் அவள் தன்னை முன் பின் தெரியாத ஒருவர் பார்த்துக் கொண்டே இருப்பதைக் கவனித்தாள்.
இராகவனின் பார்வையை தவிர்க்க முயற்சித்தாள்.

அவனை கண்களாலே மிரட்டினாள்.
இரயிலின் அசைவு சிவாவை எழுப்பிவிட்டது.
அவன் இராகவனைக் கவனித்தான்.
இராகவனின் கண்களில் காதல் வழிந்தது.
அவன் பார்வை சென்ற இடத்தை நோக்கினான்.
ஒரு பெண் புத்தகம் படிப்பதுபோல் தன்னை மறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

சிவாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

" ஹாலோ மேடம்! புத்தகத்தை தலைகீழாக வைத்துக் கொண்டு என்ன படிக்கிறீங்க? ",என்றான் சிவா.

புத்தகத்தைக் கவனித்துவிட்டு " ச்சீய் " என்று தலையில் தட்டிக் கொண்டே புத்தகத்தை நேராகத் திருப்பினாள்.

" அப்போ இவ்வளவு நேரம் புத்தகம் படிக்கவில்லை! ",என்றான் சிவா.
அவள் பதில் பேசவில்லை.

ரொம்ப அமைதியான பெண் என்று சிவா அதற்குமேல் பேசாமல் விட்டுவிட்டு இராகவனைப் பார்த்தான்.
அவன் இன்னும் விடுதலை அடையவில்லை.

" ஹாலோ இராகவன் சார்! பார்த்தது போதும்.
நம் வந்த காரியத்தை மறந்துவிடாதீரும். ",என்று சிவா கூற இராகவன் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

இராகவனும் தனது தோல்பையிலிருந்து, " மனதின் போர் (The War of Mind) ", என்ற புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான்.
அவள் அவ்வப்போது இராகவனைப் பார்ப்பது அனிச்சை செயலாகிவிட்டது.

நேரம் இரவு 8 மணியை அடுத்திருந்தது.
இரவு உணவு வர சாப்பிட்டார்கள்.
பிறகு இராகவனும் சிவாவும் படுக்கையைத் தயார் செய்து படுக்க,
அவளும் இராகவனுக்கு எதிர் படுக்கையில் படுத்தாள்.

சிறிது நேரத்தில் இராகவன், சிவா இருவரும் தூக்கத்தில் ஆழ்ந்தார்கள்.
அந்த பெண் புத்தகத்தில் மூழ்கி இருந்தாலும் அவ்வப்போது இராகவன் முகத்தைக் காண்பதற்கு மறக்கவில்லை.

அதிகாலை மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
இரயில் ஒரு இரயில் நிலையத்தில் நின்றிட ஹிந்தி பேசிக் கொண்டே ஒரு கும்பல் இரயில் ஏறியது.
இரயில் மீண்டும் கிளம்பியது.

படுத்திருந்த அந்த பெண்ணை மெதுவாக தூக்கிச் செல்ல, சிறிது சத்தம் கேட்டு இராகவன் எழுந்து கொண்டான்.
அந்த கும்பலோடு சண்டை போட முழித்துக் கொண்ட சிவா, இராகவனால் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் வேடிக்கை பார்த்தான்.

அதே போல் இராகவன் அக்கும்பலை அடித்துவிரட்ட அந்த பெண்ணை காப்பாற்றினான்.
இதனால் அப்பெண்ணின் மனதில் இராகவனுக்கு நல்ல இடம் கிடைத்தது.

" Thank you so much ", என்றவள் அதற்கு மேல் பேசவில்லை.
அதற்கு இராகவன், " It's ok. It is my duty. ", என்று கூறி தன் படுக்கையில் படுத்துக் கண்களை மூடினான்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (18-Jul-18, 1:00 pm)
பார்வை : 197

மேலே