தேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி 19

" விட்டுப் பிரிய இயலவில்லை,
கண்ணை திருப்பினாலும் மனக்கண்ணில் நீயே,
காட்சி தர ஏது செய்வேன் பாவி நான். "

அவள் இதயத்தின் உணர்வு இது.
சொல்லவும், மெல்லவும்,
துப்பிடவும், முழுங்கவும் முடியாத உணர்வு இது.

இந்த இரயில் பயணம் எது வரை நீளும்?

பார்வையின் அர்த்தம் சொல்லுதே இப்படியே இந்த இரயில் பயணம் நீளாதா?

இனியும் காத்திருப்பதில் அர்த்தமில்லை,
பேச வேண்டியதுதான். அவள் தனக்கு தானே சொல்லிக் கொண்டாள்.

ஆனால் எப்படி பேசுவது?
அவனைப் பற்றி சரியாகத் தெரியாமல் எப்படி பேசுவது?

ம்ம்ம், தெரிந்துக்கொண்டே பேசிக்கலாமே.

அவளது மனதில் எதற்காகவும் இவ்வளவு ஆலோசனை இதுவரை செய்ததில்லை.


" ஹாய் "

அது அவனது குரல் தான்.

நிமிர்ந்து பார்க்கிறாள் அவள்.

" என் பெயர் இராகவன். ",

கேட்டதும் அவளது கண்கள் விரிய அவனைப் பார்க்கிறாள்.

" உங்க பெயரென்ன? ",

அவள் பேசவில்லை,
அவன் மேல் படிந்த பார்வை மட்டும் மாறவில்லை.

இரண்டு நிமிடம் அப்படி இராகவன் நின்று அவள் கண்களைப் பார்க்க அவளோ வெட்கச் சிரிப்போடு தலை கவிழ்ந்தாள்.

" ஓ! உன் பெயரைச் சொல்ல விருப்பம் இல்லையா? "
என்றவன் பதிலுக்காகக் காத்திருக்காமல்
அவ்விடம் விட்டு அகன்றான்.
இரயில் பெட்டி வாசலில் சென்று நின்றான்.

அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
அவனைக் காணவில்லை.
எங்கே பொயிருப்பான் என்று தேடிக் கொண்டு எழுந்து நடைபாதையில் வந்து பார்த்தால் அவன் வாசலில் நின்றிருந்தான்.
அருகிலே சென்றாள்.

" என் பெயர் வசந்தப்ரியா. "
என்றாள்.

" என்ன சொன்னீங்க? "
கேட்காதது போல் நடித்தான்.

" என் பெயர் வசந்தப்ரியா. "
பொறுமையாக சொன்னாள்.

" சாரிங்க. இரயில் சத்தத்தில் கேட்கவில்லை.
மறுக்கா சொல்லுங்க. "
வேண்டும்னே அவளிடம் பெயர் கேட்கவில்லை என்கிறான்.

சற்று கோபம் வந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், " என் பெயர் வசந்தப்ரியா. ",என்றிட, அந்தப் பக்கமாக வந்த பெரியவர், " ஏன் மா இப்படி கத்துற? என்னாச்சு? ",என்று கேட்டார்.

" ஒன்னுமில்லை தாத்தா. இரயில் வாசல் அருகில் நின்று கத்தனும்னு அவங்களுக்கு ஆசை. அதான் கத்தினாங்க. ", என்று இராகவன் பெரியவரிடம் சொல்ல,
பெரியவர் அங்கிருந்து நகரும் முன் ப்ரியா கோபமாக அங்கிருந்து நகர்ந்து சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள்.

அதைக் கவனித்த சிவா, " என்ன இவ மட்டும் தனியா வந்து உட்காருறா. நம் ஆள எங்க? ", என்று யோசித்தான்.
அதற்குள் இராகவன் வந்து சேர்ந்தான்.

ப்ரியாவிடம், " சாரி, நான் அப்படி செய்து இருக்கக் கூடாது.
நான் பேசும் போது நீ பேசாமல் இருந்தது எனக்கு கடுப்பாச்சு. அதான். சாரி. ",என்றிட
அவளோ வேதாளம் முருங்கமரம் ஏறியதைப் போல் மூக்குமேலே கோபம் வர, " பழிக்குப்பழி வாங்கிட்டீங்க. அப்புறமென்ன? போய் உட்காருங்க. ",என்று கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அமைதியாக இராகவன் வந்து சிவா பக்கத்தில் அமர்ந்தான்.
சிவாவிற்கு இராகவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

இருந்தாலும் ஏதும் பேசவில்லை.

பொழுது விடிந்தது.

இராகவன் எழுந்து சென்றான்.

சிவா, ப்ரியாவிடம், " ப்ரியா உங்களுக்கு இராகவனை பிடிச்சுருக்கா? ",என்று கேட்டான்.
" பிடித்திருந்தது. ஆனால் பிடிக்கவில்லை. " என்றாள் கோபமாக.

" உங்க கோபம் இன்னும் குறையவில்லைனு நினைக்கிறேன். ", என்றவன் இராகவனின் கடந்த காலம் பற்றிச் சொன்னான்.

ப்ரியா மிகவும் சோகமாகிவிட்டாள்.
ஏனென்றால் அவளுக்கும் யாருமில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த விபத்தில் குடும்பமே பலியாகிவிட்டது.
அவள் மட்டுமே தப்பி இருந்தாள்.

இப்போது கூட எங்கே போகிறோம் என்று தெரியாமல் தனக்கு பாதுகாப்பான இடம் தேடியே அவள் செல்கிறாள்.
சிவாவிடம் ப்ரியா தன்னைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தாள், அதை இராகவனும் கேட்டான் மறைவாக நின்று.

ப்ரியா தன் கடந்தகாலத்தைக் கூறி முடிக்க இராகவன் ஏதேச்சையாக வருவது போல் வந்தான்.

அந்த இடமே அமைதியானது சில மணித்துளிகள்.

சிவா அங்கிருந்து எழுந்து சென்றான்.

" சாரி இராகவன். ", மௌனம் கலைந்தாள் ப்ரியா.

" பரவாயில்லை. ",என்ற இராகவன், " இப்போது எங்கே சென்று கொண்டிருக்கிறாய்? ", என்றான்.

" பாதுகாப்பான இடம் தேடி... ",என்றாள்.

" இந்த உலகில் பாதுகாப்பான இடம் எங்கே உள்ளது? ",என்றான் இராகவன்.

" அன்பால் நிறைந்து வாழ்வோர் நிறைந்த இடமே பாதுகாப்பான இடம். ",என்றாள் ப்ரியா.

" அப்படியென்றால் கிடைப்பது அரிது. நீ என்னோடு இருந்துவிடு. ",என்றான் இராகவன்.

" சரி. ",என்றாள் ப்ரியா.

சிறிது நேரத்தில் ஒரு நிலையத்தில் நின்றது இரயில்.
சிவா சென்று இனிப்பு கேக் மற்றும் உணவு வாங்கி வந்தான்.

முடிந்த சிவாவின் பிறந்தநாளுக்காகவும், இனிய அமைய உள்ள இராகவன், ப்ரியா இருவரின் இனிமையான வாழ்க்கைக்கும் இனிப்பை தின்று கொண்டாடினர்.

இப்படியே இரயில் பயணம் சுவாராஸ்யமாக முடிவை நெருங்கியது.

சிவா, இராகவன் மற்றும் ப்ரியா மூவரும் டெல்லி இரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கால் டாக்சி மூலமாக சிவாவின் நண்பர் அப்துல்லாவிற்குச் சொந்தமான அன்பு இல்லம் என்ற ஆதரவில்லாதோர் காப்பகத்தை அடைந்தனர்.

அங்கே மூவரையும் அன்போடு, இன்முகத்தோடு வரவேற்ற அப்துல்லா, சிவாவிடம் அங்கிருந்த பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சென்னை கிளம்பினார்.

அன்பு இல்லத்தில் அனைவரும் சிவாவிடமும் அவனோடு வந்தவர்களோடும் அன்பாகப் பழகினர்.

இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் சிவா, இராகவன், ப்ரியா பொறுப்பில் அன்பு இல்லத்தைவிட்டு விட்டு,
தனது பயணத்தைத் தொடங்கினான்.

இந்நிலையில் அசோக்கிற்கு ஜெகன் வேறொரு வேலை கொடுத்தார்.
அதன் பொருட்டு அசோக் செல்ல நேரிட்டது.

ஜெகன் புறாக்களுக்கு இரை இட்டுக் கொண்டே அவற்றிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு புறா வந்து ஒரு காகிதத்தைக் கொடுத்தது.

அது பெரியவரான குரங்கனார் அனுப்பிய மடல் தான்.

அதில், " அன்பானவர்கள் சங்கமித்து வாழும் இடமே பாதுகாப்பான இடம்.
இந்த உலகம் விரைவில் பாதுகாப்பான இடமாக மாற்றப்படும்.
அதற்காக உழைப்பதே நம் கடமை. ",என்றிருந்தது.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (19-Jul-18, 7:15 pm)
பார்வை : 92
மேலே