காமராஜர்

எளியவன் கையிலே ஏடு...
அதனால் சிறக்குது நாடு....
இந்த கனவு கண்டது யாரு...
கொஞ்சம் கடந்த காலம் சென்று பாரு....
வறண்டு போச்சுனா வேரு...
ஏழை வயித்துகில்ல சோறு....
அத உணர்ந்த தலைவன பாரு...
அந்த அணையில் அடங்கிய நீரிடம் கேளு...
வேலைக்கு வேணுமுன்னு அறிவிப்பு..
இவ்வளவு ஆகுமுன்னு சொல்ல மறைப்பு..
முறைப்படி நடப்பது போல் நடிப்பு...
மேஜை அடியில் பணம் அளிப்பு...
இப்படிதான் இப்ப இங்க பொழப்பு...
உன் போல் தலைவன் இல்லையே என தவிப்பு...
எப்படியா கண்டுகிட்ட
கைநாட்டு கைகிதத்தில்
காசில்லாதவன் கைரேகை...
மங்கிய கைரேகை மடிந்து போக கூடாதுனு...
மருத்துவம் படிக்க வச்சு..
அவன் தலைமுறைய தழைக்க வச்ச...
கிழிஞ்ச சட்டை தைக்குது ஒரு துண்டு
கொஞ்சம் உசுரு இருக்குற செருப்பு....
சட்டை பையில பாரு...
அதில் காந்தி காகிதம் ஏது?...
இப்படியோர் தலைவன் என் முன்னே இறந்து விட்டான்
என்றென்னி ஏங்க வைச்ச...
உன்ன நேரில் பாத்தது இல்ல...
நொடி கூட பேசினது இல்ல...
ஏட்டினிலே படிச்சான் உன்ன...
வணங்குகிறேன் நீ நடந்த மண்ண...
இது தான் நீ கண்ட வெற்றி...
உருவாவேன் உன்னை பின்பற்றி....
பா.முருகன்