கனவில் விழித்துக்கொண்ட கனவிலிருந்து
ஒப்பனையற்று திமிரும்
மெல்லிய மகரந்த குள்ளர்
கால்களில் வழுக்க...
கதிரொளி நுனி நுழையும்
தூசியளவு தேன் கொண்டு
பசியின் கண்களை அடைத்து
பூக்களின் முத்தங்களில்
அதரம் துடைத்து
காற்றின் மௌனத்தில்
பாதையற்று நெகிழும்
வெளியின் கூச்சங்கள் ஏற்று
துவைத்து துவைத்து
பறக்கப்பழகி பறக்கும்
கனவொன்று மட்டுமல்ல...
என்பதை கண்டேன்.
கனவில் பூச்சியாய்
இருந்த எனக்கு...
மெல்ல தெரிந்தது...
கொடுவாளாய் துரத்தும்
சுரணயற்ற இரு விரலின்
பிசுபிசுத்த வெறியும்
கனவாய் வரலாம் அந்த
பட்டாம்பூச்சிக்கு என்பதும்.