காதலில் இசை

ஸ்வரங்களில் உன்னை காண்கின்றேன் என்றாய்
என்னவனே நீ அறியாயோ என்னை தழுவும்போது
உன் விரல்கள் என்னை யாழின் நரம்புகளாய்
தீண்டிடும்போது நான் ராகங்களாய் மாறி
அதன் கீதங்களாய் வந்து உன் மனதில் நடமாட
அதற்கு நட்டுவாங்கம் நீயாய்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (19-Jul-18, 3:23 am)
Tanglish : kathalil isai
பார்வை : 63

மேலே