தோளில் தொற்றிய கிளி

கழுத்தை சுற்றிய
கிளியொன்று கன்னம்
உரசுகிறது
என்னருகில் அமர்ந்து
என்னையே எட்டியெட்டி
பார்க்கிறது
எப்போது நீயெனை
பார்ப்பாய் என
அது கேட்காமல்
பார்த்தது

என் விரல்கள்
தட்டச்சு செய்யும்
விதம் பார்த்து
கண் விரிக்கிறது
அதற்கு தெரிந்த
ABC ஐ மட்டும்
வைத்து கொண்டு
அத்தனையும் தெரியும்
என்று சொல்லி
தட்டச்சில் கைவைத்து
நான் காலையில்
கம்ப்யூட்டரில்
போட்ட கவிதை
கோலத்தை குலைத்து
போடுகிறது

வாய் மூடாமல்
கேள்விகள் கேட்கிறது
என் கவிதையின்
கரு மாறிப்போனது
இப்போது
புது வண்ணம்
தீட்டப்பட்ட ஓவியம்போல
எதையோ எழுத
எண்ணிய நான்
இப்போது வேரெதுவோ
எழுதி முடித்து
தோளில் தொற்றிய
கிளியென்று தலைப்பிட்டு
முடித்து விட்டு
கணினியின் திரைமூடி
அமழலையின் விழித்திரை
நோக்கி அந்த
புன்னகை சாரலில் நனைந்து
என் தாய்மைக்குள்
பிரவேசிக்கப் போகிறேன்


குறிப்பு மழலைக்காக எழுதிய சிறு கவிதை

எழுதியவர் : யாழினி வளன் (19-Jul-18, 6:33 pm)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 66

மேலே