குயேற்றம்

வெள்ளையடித்து
வீட்டைச் சுத்தம்செய்து
விழா எடுத்துக்
குடி புகுந்தாலும்,
நீ சேர்த்தது
கொள்ளையடித்துப் பிறர்
குடியைக் கெடுத்து
கொண்டுவந்த
செல்வம் எனில்,
உன்
உள்ளமாம் வீட்டில்
உள்ளே குடியேற வராதே-
நிம்மதி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Jul-18, 6:58 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 56

மேலே