விபச்சாரம் ஒழிந்தது - ஹைக்கூ
![](https://eluthu.com/images/loading.gif)
மனத்திலிருந்து உடலுக்கு மாறியது
கற்புக் கோட்பாடு
விபச்சாரம் ஒழிந்தது
© ம. ரமேஷ் ஹைக்கூ
விளக்கம் தேவைப்படுபவர்க்கு மட்டும்.
கற்பின் கோட்பாட்டில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறேன். ‘கற்பு’ என்பது வெறும் ‘மனசு’ சம்பந்தப்பட்டது என்று நினைத்துக் கொண்டிருப்பதால்தான் அனைத்துப் படைப்பாளர்களும் விலைமகளும் “உடலைத்தான் விற்கிறேன் மனசை அல்ல” என்று டயலாக் பேசுகிறார்கள். இந்த ‘மனசை விற்க வில்லை’ என்ற வார்த்தையைத்தான் எல்லா கவிஞர்களும் படைப்பாளர்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதன் காரணமாக அவர்கள்மேல் ஓர் இரக்க உணர்வையும் உண்டாக்கி வைத்துவிட்டார்கள் என்பது என் குற்றச் சாட்டும்கூட. உறவில் உடம்பு மட்டும்தான் ஈடுபடுகிறது மனசு சம்மதப்படவில்லை என்பது அவர்களது ஏமாற்றுப்பேச்சு (அதைத்தான் எனது கவிதையும் சாடிப் பேசுகிறது). இனி கற்பு என்பதற்கு ‘மனசு’ என்பதை மாற்றி ‘உடல்’ என்று கொண்டு வந்து விட்டால் ‘பணத்துக்காக மனசை விற்க வில்லை’ என்ற விலைமகளிரின் கூற்று மதிப்பிழந்துவிடும். கற்பு என்பது ‘உடலாக’ இருக்கும்போது, உறவில் உடம்பு நேரடியாக ஈடுபடுவதால் அவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துரைக்கலாம். அவ்வாறு செய்வதால் அத்தொழில் செய்பவர்கள் வருந்துவார்கள். அத்தொழிலிருந்து விலகுவார்கள். (ஆனால் அண்மைய ஆய்வு ஒன்று, அத்தொழில் அவர்களுக்கு வசதியாகவும் உடல் உழைப்பின்றி எளிமையாகச் சம்பாதிக்க நல்ல வாய்ப்பாகவும் இருக்கிறது என்று கருத்து முடிவைச் சொல்கிறது)
சரி தற்போதைய கற்பு என்ற கோட்பாடு மனசு என்பதிலிருந்து கற்பு என்பது உடம்போடு சம்மந்தப்பட்டது என்று மாற்ற சமுதாயம் முன்வருமா?