நட்பெனும் புதையல்
புதையலைத்தேடி அலைந்து
அது கிடைத்தாலும்அதை
வைத்துக்கொள்வதில் பயமே அதிகம்
'பூதம் காத்த புதையல்.என்பர் அதனால்
பொன்னைத்தேடி அலைந்து அது
கிடைத்தாலும் பயமே
நகையை அணிந்து சென்றால்
வீதியில் அலையும் கள்வரால் தொல்லை
வீட்டில் வைத்தாலும் கள்வர் தொல்லையே
இவற்றை எல்லாம் விட்டுவிட்டு ;
தேடி தேடி அலைந்து நல்லதோர்
நண்பனின் நட்பு கிடைத்தால்
உலகில் இன்னும் என்ன வேண்டும்
கிடைக்க

