வாய்மையே வெல்லும் -
‘நெறியின் அன்ன என்றனை விடா நிறை இவட்கு உளதேல்
இறுதி இன்மை பெறுக, இல் எனின் இவள் இறுதி
பெறுக’ என்று வாள் வீசீனன்; பேதைதன் கழுத்தில்
மறுமணத்திடு மாலையாய் வீழ்ந்தது அவ் வடிவாள்.
. வழியில் குழந்தை ஒன்றின் பிணம் கிடக்கிறது. அது கள்வரால் கொலை செய்யப்பட்ட காசி அரசனின் குழந்தை. சந்திரமதி தன் குழந்தையைப் பேய்கள் கொண்டுவந்து போட்டனவோ என்று இருளில் குழந்தையைப் பார்க்கும்போது காவலாளிகள் குழந்தையைக் கொன்றவள் இவளே என எண்ணிக் குழந்தையுடன் அரசன்முன் நிறுத்துகின்றனர். அரசன் இவள் கொன்றிருக்கமாட்டாள் என எண்ணுகிறான். என்றாலும் அவளுக்குக் கொலைதண்டனை விதிக்கிறான். காவலாளிகள் வீரவாகுவிடம் அவளை அழைத்து வருகின்றனர். அவளைக் கொலை செய்யும்படி வீரவாகு அரிச்சந்திரனை ஏவுகிறான். அப்போது விசுவாமித்திரன் வந்து “இப்போதாவது, நீ எனக்குக் கொடுத்த நாட்டைக் கொடுக்கவில்லை என்று சொல்லிவிடு” என்று அரிச்சந்திரனுக்கும் சந்திரமதிக்கும் கேட்கும்படி கூறுகிறார். (பொய் சொல்லச் சொல்கிறார்) கடமையைச் செய்யும்படி மனைவி கணவனைத் தூண்டுகிறாள். இந்திரன் வசிட்டரும் தேவரும் சூழ அங்கு வந்து பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். அரிச்சந்திரன் தன் மனைவி சந்திரமதியைக் குனியவைத்துக் கழுத்தில் வெட்டுகிறான். அந்த வெட்டு அவள் கழுத்தில் மாலையாக விழுகிறது.