பிணங்களே என்னை வாழ விடுங்கள்
எங்கூட மல்லுக்கட்ட
உனக்குத்தான் உசுரு இருக்கா
கல்லு வச்சு கல்லறை கட்டையில
பாதியில விட்டு போன
சில்லற மாதிரி இருப்பவனே
எங்கூட மோதத்தான்
உனக்கு திராணி இருக்கா
ஒரு அடி எடுத்து வைத்து
முன்னும் பின்னும் நடக்கத்தான்
உன்னால முடிஞ்சிருக்கா
மேல போகிற மேகங்களை
மேம்போக்கா ரசிப்பவனே
ரசி... ரசி ... ரசி
இந்த நாள் உனக்கு
இறந்த நாள் ஆகப்போகிறது
மரணம் அறிந்தவனுக்கு
கடைசியாச உண்டுதானே
உனக்கும் இருந்தால் சொல்
உதவி செய்கிறேன்
வரட்டும் வரட்டும்
சேலை கட்டி வண்டி எடுத்து
சேரத்து கலெக்டர் அம்மா வரட்டும்
உம்முனு இருக்கிற
உன்ன பிச்சி தின்ன போறேன்
மலை கொத்திப் பறவை நான் - உன்
பலத்த நானும் பாக்க போறேன்
இருந்து இருந்து
தொப்பை வளர்த்தவனே - உன்
கட்டுக்கோப்பான உடலை கண்டு
பயந்து விட மாட்டேன்
முதுகு நரம்பை முறித்து
முன்னால் போடுகிறேன்
கடுகளவு நம்பிக்கை
உனக்கும் இருந்தால்
மலையே ..!
உன்னைக் காப்பாற்றி பார்
இடிக்க வந்த இயந்திரம்
துடிதுடித்து பேச ...
எவன் எவனோ வந்து பயம் காட்ட
எந்திர காலன் வந்து
கை வைக்கத்தான் நானும் விடுவேனா
சினமெடுத்த மல சீறியும் வெடிக்க
சீறி நின்ன இயந்திரத்தை
சின்னாபின்னமா நொறுக்க
இடிக்க போன படையை உசிரெடுத்து
குருதி தெளிச்சி பாடையில கிடத்த
குலுங்க சிரிச்ச மல
கும்பிட்டுதான் சொன்னதுங்க
பிரபஞ்சத்தின் பிஞ்சுக்குழந்தை நான்
பிணங்களே..!
என்னை வாழ விடுங்கள் என்று.!