மழையின் காதலி

யாரின் அனுமதிக்கும்
காத்திராமல் உன்னை
காணவே
விண்ணில் இருந்து
விருவிருவென
வருகின்றன
ஏராள மழைத்துளிகள்
நீ குடை பிடித்திருப்தை
பார்த்தும்
தான் மண்ணில் விழத்தான்
போகிறோம் என்று தெரிந்தும்
கூட விழுகின்றன
மழையின் காதலியே
நீ குடையை தூக்கி எறிந்துவிட்டு
தூரலில் கொஞ்சம்
நனைந்திட மாட்டாயோ
அந்நேரம் நானும் தூரல்
மழையாய் மாறிட மாட்டேனோ
உன் தேகம் தொட்டு
என் ஜென்மம் ஈடேற மாட்டேனோ...!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (23-Jul-18, 7:15 pm)
Tanglish : mazhaiyin kathali
பார்வை : 53

மேலே