இசையும் இசைக்கருவியும்
இதழில்லா புல்லாங்குழல்
இதயத்தோடு இணைந்து
பேச துடிக்கின்றதே
அதன் மாயம் என்ன ????
விரலில்லா வீணை
விருப்பங்களை தொட்டு தீண்ட
முயற்சித்து வருதே
அதன் மாயம் என்ன???
கண்கள் இல்லாத யாழின் கம்பிகள்
கண்களை மறைத்திருக்கும்
இமைகளை மூடச் செய்ய
திட்டமிடுகிறதே
அதன் மாயம் என்ன???
நாவில்லா நாதஸ்வரம்
நரம்புகளை கட்டி இழுக்க
நாழிகைகளை தேடுதே
அதன் மாயம் என்ன ???
களைப்புகள் மறைய
இசையையும் இசைக்கருவியையும்
கண்டெடுத்த மனிதன் -- அந்த
இசைகளோடு இதயம் கறைய
ஓயாமல் இன்னும் முயற்சிகள்
எடுத்துக்கொண்டிருக்கிறான்...!!