கலங்காதே என் காதலி

நீ எங்கோ
நான் எங்கோ
இருந்தாலும்
நாம் பார்க்கும்
வானம் ஒன்று தான்
நாம் வாழும் பூமி ஒன்று தான்
நீ காணும் நிலவும்
நான் காணும் நிலவும்
ஒன்று தான்
உனை தீண்டும் காற்றும்
எனை தீண்டும் காற்றும்
ஒன்று தான்
தூரங்கள் நம்மை
பிரித்தாலும்
நீயும் நானும்
பிரிந்திருந்த நொடி ஒன்று இல்லையடி
கலங்காதே என் காதலி
நாம் பேசாத காலத்திலும்
நம் காதல் வாசம் வீசுமடி
உன் சுவாசத்தையும்
என் சுவாசத்தையும்
பல கண்டங்கள் கடந்தேனும்
இணைக்குமடி....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (23-Jul-18, 8:19 pm)
பார்வை : 70

மேலே