இந்த இயற்கையோடு
மஞ்சள் வானம்
கொஞ்சும் கடலலை
அலைகள் மிஞ்சும்
கடல் கரையாய்
நாம் கால் நடையில் களைப்போமா
கரைகளின் அழகை
விரல் இடையில் வீசும் காற்றை
கைது செய்வோம் நாம் இதழ்களில்
வினாக்கள் எழ
விடைகொடுப்போம் விழிகளில்
கனாக்கள் பேசி
காலங்கள் கடப்போம்
இந்த இயற்கையோடு...