காதலிக்க ஆசையில்லை
இங்கே
யாருக்கும்
காதலிக்க
ஆசையில்லை..
மாறாக
காதலிக்கப்படவே
ஆசை.
நான் மட்டும்
என்ன
விதிவிலக்கா??
அதனால்தான்
என்னவோ-- நீ விளையாட வித்தியாசமான பொருள் கேட்டதற்கு-சற்று
யோசிக்காமல்
என் இதயம் கொடுத்தேன்..
நீ தூக்கி எரிவாய்
என்பதறியாது.... இன்று,
வலிக்கவில்லை எனக்கு -ஆனால் வதைத்துவிட்டது என்னை!!