கேரளத்து கட்டழகி

கேரளத்து கட்டழகி ஒருத்தியைக் கண்டேனே
காரிகையின் வனப்பில் மயங்கியதே என்மனம்
மாசிலா அவள் வட்ட முகத்தில்
பால்நிலாவின் பொலிவைக் கண்டேன்
பூசிய மஞ்சள் முகத்தில் தங்கமாய் ததும்ப
அம்மம்மா அவள் அழகை என்னென்பேன் நான்

அம்மன் சிலைபோல் காண்கின்றேன் நங்கையை
செவ்விதழ்கள் என்பேனா அவள் அதரத்தை
இல்லை சிவந்த பவள பேழை என்பேனா
குவிந்து விரியும்போது அதில்
கொற்கைமுத்துக்கள் பல்லை காண்கின்றேனே

இவள் இயற்கைபொலிவைக் கண்ட பாரதி
இவளை'சேர நன்னாட்டு மங்கை'என்றான்
ரவிவர்மன் வரைந்த அழகுதேவதையும் இவளே
மங்கையர் மதிமயங்கும் சுந்தரி இவளே
அவனியில் இவளைப்போல் அழகியைக் கண்டதில்லை.

கடைந்தெடுத்த வெண் தேக்கு தந்ததோ
இவள்உடலின் வனப்பு அதில் அங்கம்
ஒவ்வொன்றும் தனித்தனி பேரெழிலே
வெண்பட்டு சீலை அணிந்த இவள்
கலைமகளாய் அல்லவோ காட்சி தருகின்றாள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Jul-18, 2:43 pm)
பார்வை : 386

மேலே