வாழ்க்கையே வலி நிறைந்த பயணம்
வாழ்க்கையே வலி நிறைந்த பயணம்
சறுக்கிய சமயங்கள் பல இருந்தும்
என்றாவது ஒரு நாள் ஜெயிக்க மாட்டோமா
என் வாழும் மனிதர்களே அதிகம்
ஓடுவதை நிறுத்திவிட்டால்
நின்று விடுவோமோ என பயந்து
இங்கு பலர் சந்தோசத்தை இழந்து
சுயத்தை மறந்து ஓடிகிறார்கள்
"ஐயோ இவர் நம்மள பத்தி என்ன நினைச்சிடுவாரு"
"இவன் முன்னாடி வாழ்ந்து கட்டணும்"
"அவனை இல்லாட்டி நானா பாத்துக்கலாம்" என அறிவை சிறிய வட்டத்தில் சுருக்கி
நேசிக்க மறைந்து
அன்பை இழந்து
தினமும் நடித்து
ஒடிந்து வாழும் கூட்டத்தில் நானும் ஒருவன்
சிரிக்கும் போது உலகை மறந்து சிரி
பேசும் பொழுது சுற்றி இருப்பவர்கள் முட்டாள் என நினைத்துக் கொள்.
வாழ்கை ஒரு முறை அதை உனக்காக நீ வாழப் பழகு
அதை விட்டுவிட்டு தலைக்கனம் கொண்டு
மரியாதை மறந்து
தமக்குத்தானே முகமூடி அணிந்துகொண்டு வாழும் வாழ்வை
குப்பை தொட்டியில் எறிந்துவிட்டு வாழப் பழகுவோம்.
"அறிவு என்பது சேர்ப்பதற்கு
பணம் என்பது செலவிப்பதற்கு
வாழ்கை என்பது வாழ்பவர்க்கு" இது என் தந்தையின் எனக்கென கூறிய வரிகள்
அரசியல் பேசு ஆனால் பிறரிடம் அரசியல் செய்யாதே
சின்ன சின்ன பொய்கள் ஒவ்வொரு உறவிலும் கிடைக்கும் நினைவுகள்
சண்டையில்லா உறவு வெறும் கானால் நீர்
உனக்கு பிடித்தவரிடம் ஒரு முறையாவது குட்டிச் சண்டை போட்டு இருக்க வேண்டும்
பெண்கள் உயிரை படைக்கும் கடவுள்
ஒரு போதும் அவர்களுக்கு தவறு இளைக்காதே
ஆண்கள் குடும்பத்தை காட்கும் உயிர்
முடிந்தவரை அவர்கள் செய்யும் தவறை மன்னிக்க பழகுங்கள்
உன்னை நீ நம்பு
ஆண்டவன் இருட்டில் இருக்கும் நிழல்
உன் உழைப்பே உன்னை மேலே தூக்கும் ஏணி
கல்யாணம் செய்யும் முன் காதலிக்கவில்லை என்றல் கூட பரவாயில்லை ஆனால் குடித்துவிடு ஏனென்றால் வருங்காலத்தில் வரும் கஷ்டங்களுக்கு மது விடை தராது என்பது புரியும்.
உங்கள் வாழ்க்கையாய் பற்றி கருது சொல்லவோ
இப்படி மாற்றிக்கி கொள் என அறிவுரைகூற இங்கு யாருக்கும் தகுதியில்லை நீங்கள் தான் உங்களுக்கு கடவுள் முதலாளி நண்பன் எல்லாமே. ஊரின் பேச்சை செருப்பை போல் வீட்டிற்கு வெளியில் விட்டுவிட்டு " இதுவும் கடந்து போகும்" என இன்பத்திலும் துன்பத்திலும் நினைத்துக் கொண்டு வாழப்பழகுங்கள்.
தோல்வியுளும் வெற்றிக்கு பாதை தெரியும்
இருட்டையும் நிலவின் ஒளி அழகாய் மாற்றும்.