புதைந்த சிலை
அந்த கோவிலுக்குள் அனைவரும் இருக்க
அழுகையை நிறுத்துங்கள். தர்மகர்த்தா உத்தரவிட்டார். அனைவரும் அமைதியானார்கள்.
*சிலை காணவில்லை*
தங்கள் கடவுளாக நினைத்து அச்சிலையை காணவில்லை திருவிழா எப்போது எப்படி நடக்கும் என அனைவருக்கும் குழப்பம் ஏற்பட்டது. அனைவரும் பயந்து கொண்டு நம் ஊரில் ஏதோ தவறு நடக்கிறது என்று புலம்ப ஆரம்பித்தார்கள். இந்நிலையில் சில யார் எடுத்திருப்பார்கள். வெகுநேரம் குழப்பங்கள் ஏற்பட்டது பெண் போலீசிடம் இந்த வழக்கை ஒப்படைத்தனர். திருவிழாவிற்கு ஒரு மாத காலம் இடைவெளி இருப்பதால் இந்த சிலையை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தனர். தர்மகர்த்தாவும் தன் மீது சந்தேகம் வராதவாறு அவரும் புகாரில் கையொப்பமிட்டார்.
இரண்டு மூன்று நாட்கள் கழிந்தது இதேபோல், போலீஸ்காரர்கள் விரைந்தனர். கோவிலை சுற்றி பாதுகாப்பு போட்டனர். போலீசாரின் உயர்பதவியில் இருந்த பெண் போலீஸ் பெயர் மோகினி. அவர் இந்த வழக்கை தீவிரமாக இறங்கினார். இந்த ஊரில் வந்தவர்கள் புதிதாக வந்தவர்கள் அந்த ஊரில் இருக்கும் அனைவரையும் அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். அதுமட்டுமில்லாமல் கோவிலைச் சுற்றி கேமராக்களை பொருத்த முற்பட்டார்.
முதலில் பூசாரி விசாரணையில்....
என்ன நடந்தது சொல்லுங்கள் என மோகினி கேட்க,
அம்மா நானும் என் மகளும் மட்டும்தான் இறுதியாக இருந்தோம். இரவு பொழுது வரை அங்கே பவுர்ணமி பூஜை நடந்தது. சிலை பிரகாசமாக இருந்தது. நெய்வேத்தியம் காட்டிவிட்டு பிரகாரத்தில் மூடி வைத்தேன். பூட்டி விட்டு சாவியை எடுத்துச் சென்றேன்.
அத்துடன் காலையில் நானும் அவளும்தான் பிரகாரத்தை திறந்தோம் முதலில் நாங்கள் தான் பார்த்தோம் சிலை காணவில்லை. .எங்கும் தேட இல்லை. அதிர்ச்சியில்
கத்தி அழ ஆரம்பித்து விட்டோம். பின் ஒன்றன் பின் ஒன்றாக மக்கள் கூடினர். இரண்டு நாட்களுக்கு முன்னரே குறிசொல்பவர் சொன்னார் திருவிழா நடக்காது ஏதோ தடங்கல் வரபோகிறது என்று நானும் தர்மகர்த்தாவிடம் சொல்ல அவர் வீடு சென்றேன் அப்பொழுது வழியில் ஒரு பெரியவரை பார்த்தேன் அவரும் சொன்னார். நடப்பவை நல்லவையாக என்று பின் தர்மகர்த்தாவின் வீட்டில் அவரும் இல்லை. அவரும் ஊருக்குச் சென்று இப்பொழுதுதான் வந்தார்.
இதுதான் நடந்தது திடீரென சிலையை காணவில்லை.
மோகினி சரி நீங்க போங்க, என்று சொல்லிவிட்டு யோசிக்க ஆரம்பித்தார். தன் குறிப்பேட்டில் குறி சொல்பவர், ஆலமரத்தின் கீழ் இருக்கும் ஒரு பெரியவர், தர்மகத்தா என மூவரையும் குறித்துக் கொண்டார். அது மட்டுமல்லாது பூசாரி பொய் சொல்கிறாரா என்று குறுக்கு விசாரணை செய்தார்.
சிலையை யார் எடுத்திருப்பார்கள்?
இந்த விசாரணைகளில் தெரிந்துவிடுமா? யாராக இருக்கும்? தர்மகர்த்தாவாக? இல்லை பூசாரியா? அதுவுமில்லாமல் யாரோ ஒருத்தரா? கிடைக்குமா சிலை? திருவிழா நடக்குமா?