புதைந்த சிலை 6
பூசாரியை விசாரித்த அதிகாரி மோகினி அடுத்ததாக யாரை கூப்பிடுவது என்று யோசித்துக்கொண்டிருந்தார்.
குறிசொல்பவர் அடுத்ததாக அவரை விசாரிக்க அனுப்புமாறு உத்தரவிட்டார். குறிசொல்பவர் வந்தார் தயங்கி தயங்கி பயத்துடன் வந்தார். அந்த ஊரிலேயே வாழ்பவர் அந்த ஊரில் நல்லது கெட்டது அனைத்தையும் இவரிடம் கேட்டு அறிவர். மக்களின் ஆலோசனைக் குழுவின் ஆலோசனைக்கும் உதவுவார். தன் ஜோளி மூலம் அனைத்தையும் அறிந்து கூறுவார்.
உட்காருங்க ஐயா என அதிகாரி மோகினி சொல்ல, இருக்கட்டும் அம்மா அங்க நிக்கிறேன் நின்று கொண்டிருந்தார். என்ன நடந்தது பூசாரி அனைத்தையும் சொல்லி விட்டார். நீங்களும் சொன்னால் விசாரணைக்கு ஏதுவாக இருக்கும்.
திருவிழாவுக்கு முன்னாடி நான் சோளி உருட்டி பார்த்தேன் திருவிழாவில் ஏதோ தடங்கல் வரப்போகிறது, என்று சோளி அறிவுறுத்தியது .எனவே நான் பூசாரியிடம் சென்றேன் திருவிழாவில் எது தடையாக இருக்கப் போகின்றது என புரியவில்லை ஆனால் திருவிழாவில் தடங்கள் வரப்போகின்றது என்று அறிவுறுத்தினேன்.... தர்மகர்த்தாவிடம் சொல்வதாக கூறிவிட்டு இதற்கு ஒரு முடிவு எடுக்கலாம் என்று எனக்கு சொல்லி அனுப்பி விட்டார். அன்று தர்மகத்தா ஊரில் இல்லை.
இந்த ஊருல அஞ்சு வருஷமா இருக்கேன். இந்த ஊரில் நல்லது கெட்டது நடந்தா எல்லாத்துக்கும் என்னதான் கூப்பிடுவாங்க மக்களுக்கு ஏதாவது தெரியுமா என் கிட்ட தான் கேட்பாங்க அது மட்டுமில்லாமல் ஊர்ல வைத்தியமும் பாத்துட்டு இருக்கேன். எனக்கு யாரும் இல்லை இந்த ஊர் மக்களும் அந்த கடவுள் மட்டும் தான் இருக்காங்க.
அதிகாரி மோகினி குறிசொல்பவர் இடம் அனைத்தையும் கேட்டுக்கொண்ட பிறகு உங்கள் வீடு எங்கே இருக்கிறது? என கேள்வி எழுப்பினார்?
அந்த கோவிலுக்கு ரெண்டு பேரு தள்ளியிருக்கின்றது என பதில் அளித்துவிட்டு அமைதியானார்.
அது மட்டுமல்லாது வேறு ஏதாவது தெரியுமா உங்களுக்கு வேற யாராவது கோவிலுக்கு எதிராக ஏதாவது செய்து இருக்கிறார்களா ?ஞாபகப்படுத்திப் பாருங்கள். திருவிழா நடக்க கூடாது என யாராவது விரும்புகிறார்களா ?யோசித்துச் சொல்லுங்கள் என்று அதிகாரி மோகினி கேள்வி எழுப்பினார்.
குடி சொல்பவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு திடீரென்று இரண்டு வருடங்கள் முன்பு இதேபோல் திருவிழாவில்
விமர்சையாக நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஒரு கொள்ளைக்கூட்டம் திருவிழா முடிந்த இரவு கோவிலுக்குள் சிலையில் இருக்கும் நகைகளை திருட முற்பட்டார்கள். அவர்களை இந்த ஊர் மக்கள் கண்டறிந்து போலீஸிடம் புகார் செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் பெயர் கூட கூட ரங்கசாமி, வீரப்பன், கிரி அவர்களுடன் இன்னும் சிலரும் மொத்தம் ஐந்து பேர். இன்னும் அவர்கள் போலீஸின் பிடியில் தான் இருக்கின்றார்கள் என்று நினைக்கிறேன்.
மத்தபடி எனக்கு எதுவும் தெரியாது மா........
சரி நீங்கள் போங்க, எனக்கூறி குறிசொல்பவரை அனுப்பினார்அடுத்து தன் குறிப்பேட்டில் 5 பேரின் பெயரையும் குறித்துக்கொண்டார்.
வரிசை நீண்டதாக போய்க் கொண்டே இருக்கின்றது யார் இந்த சிலையை எடுத்திருப்பார்கள்,...
ஆழ்ந்த யோசனையில் இருந்தார் அதிகாரிமோகினி.........
குறிசொல்பவர் விசாரித்துவிட்டு மீண்டும் அந்த கோவிலை இரு முறை சுற்றினார். மதில் சுவர்கள் பழங்காலச் சுவடுகள் தடையங்கள் வேறு ஏதாவது இருக்குமா என்று சுற்றி ஆராய்ந்தார்.
அதுமட்டுமல்லாது அந்த சுவற்றில்
ஏதாவது கைரேகைகள் இருக்கும் என கைரேகை நிபுணர்களை அழைத்தார்...
இவற்றில் ஏதாவது கைரேகை தெரியுமா? குறி சொல்பவர் சொல்லும்படி அந்த கொள்ளை கும்பல் சிலையை திருடி இருப்பார்களா? விசாரணை செய்யும் அதிகாரி மோகினி அனைத்தையும் கண்டறிவார் இல்லை துப்பறியும் துறைக்கு விசாரணை மாற்றப்படுமா? என்ன நடக்கும் பார்ப்போம்........…