கார்கில்
பஞ்சப் பரதேசிகளும் பணம் சேர்த்தவர்களும்
பட்டம் பெற்றவர்களும் பாமர பட்டாளமும்
அன்பு நிறைந்தவர்களும் ஆசைகள் ஆள்பவர்களும்
தீவிர வாதிகளும் தீண்ட தகாதவர்களும்
ஜாதி வளர்பவரும் நாதி இழந்தவரும்
இன்னும் எண்ணற்ற பிரிவினை கொண்ட எம்மண்ணை
எவ்வித பேதமும் பாராமல் உங்கள் உறவுகளுடனும் வாழாமல்
ஓயாது எல்லை காக்கும் எங்கள் குல தெய்வமே
முகம் தெரியாத குரல் அறியாத நீ
என் மேல் காட்டும் அன்பிற்கு எவ்விதம் கைமாறு செய்வேன்