என் வீடு
வீடு என்பது ஒரு கட்டிடம் மற்றும் அல்ல
அது ஒரு நினைவுகளின் கூடாரம்
நாம் ஓயாது பார்க்க விரும்பும் காட்சிகள்
வெளிப்படும் முப்பரிமாணத் திரை
நம்மை ஆளாக்கிய பல சம்பவங்களும்
இன்னும் ஆளாக்கிக் கொண்டிருக்கும் சில தருணங்களும்
நிகழ்ந்து அரங்கேறிய மேடை
உறவுகளின் நிழல் பதிந்த பொக்கிஷம்
நீ போக விரும்பும் காலத்திற்கு உன்னை
கொண்டுசெல்லும் ஒரு அற்புத வனம்
உன்னுள் இன்று வளர்ந்த வேருக்கு வித்து
விதைத்திடப் பட்ட செழிப்பு நிலம்
நீ அரசனாக ஆள நினைத்த நாடுகள் ஒன்றிணைந்து
உருவான மனங்களின் கண்டம்
நாம் கண்ட கனவுகளின் கடந்த காலம்
உன் வாழ்க்கையை உன் அறுகில் நின்று
பார்த்த உற்றத் தோழன்
உன்னுடன் தடுக்கி விளையாடிய குறும்புச் சினேகிதன்
உன்னை நீயே தெரிந்து கொள்ளப் பார்க்கும்
உன் மனதின் கண்ணாடி