அவனும், நானும்

என்னுயிரில் அவன் உயிரும்
அவனுயிரில் என் உயிரும்
கலந்தபின்னே இங்கு
ஈருடல் ஓருயிரானதே
இனி என்ன வேண்டும்
இந்த காதல் வாழ்வில்
முடிவு எப்படியாயினும்
அவன் பிரிவில் என்னுள்
அவனும், என் பிரிவில்
அவனுள் அவன் என்னையும்
காண, எங்களுள்
பிரிவென்பது ஏதுமில்லையே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Jul-18, 12:19 pm)
பார்வை : 75

மேலே