புதைந்த சிலை 7
அதிகாரி மோகினி குறி சொல்பவர் இடம் விசாரித்துவிட்டு கோவிலை சுற்றி வந்து கைரேகை ஏதாவது கிடைக்குமா என்று கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.
கோவிலின் சுவர்களில் கைரேகைகள் எதுவுமில்லை. ஆனால் கோவிலின் உள்ளே நுழைவுவாயிலின் கருவறையில் கதவுகளில் சிலரின்கைரேகையை நிபுணர்கள் கண்டறிந்தனர். அந்த கைரேகைகள் யாருடையது என்று அறிய ஊர் மக்களிடம் அனைவரிடமும் கைரேகை பெற்றுக்கொண்டு சந்தேகப்படுபவர்கள் அவரிடமும் கைரேகையை பெற்றுக்கொண்டு அனைத்து கைரேகையும் ஒப்பிட்டு பார்த்தனர். ஆனால் யார் கைரேகையும் ஒத்துப்போகவில்லை.
என்ன இது குழப்பமாக உள்ளது. பூசாரி கைரேகையும் இல்லை மற்ற யாவரும் கைரேகையும் இல்லை.
யாரு தின்னும் கைரேகை என்ற அதிகாரி மோகினி மிகவும் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டார். அது ஒருபுறமிருக்க அடுத்த விசாரணையாக பூசாரியின் மகள் வைஷ்ணவியை அழைத்தார்.
வைஷ்ணவி வந்தவுடன், கோவிலில் என்ன நடந்தது என மீண்டும் விசாரித்தார். அவளும் தன் தந்தையை கூறியவாறு சிறிதும் பிழையின்றி ஒப்பித்தாள். நானும் என் தந்தையும் காலையில் கதவை திறக்கும் போது சிலை இல்லை என்று முடித்தார்.
கோவில் எத்தனை வருஷமா இருக்கீங்க? என அதிகாரி மோகினி கேட்க, 5 வருஷமா இருக்கும் என பதில் சொன்னாள் வைஷ்ணவி.
இந்த கோவிலைப்பற்றி வேற ஏதாவது தெரியுமா?
சிலையை யார் ஒருவர் முழுமையாக வழிபடுகிறார்களோ அவருக்கு மிகப்பெரிய பொக்கிஷம் கிடைக்கும் என என் அப்பா சொல்லி இருக்கிறார். கேட்டதெல்லாம் கிடைக்கும் என்றும் சொல்லி இருக்கிறார். இந்தச் சிலையை மிகவும் கவனமாக பாதுகாத்து வருகிறோம். ஒரு நாள் என் தங்கை இக்கோவிலின் பெருமையை சொல்லும் விதமாக, ஒரு மூன்று வருடங்களுக்கு முன்னதாக சிலையை கைப்பற்ற மந்திரங்கள் தெரிந்த சிலர் மந்திரவாதிகள் கோவிலுக்குள் வந்து சிலையை அபகரிக்க நினைத்தார்களாம். ஆனால் சிலையில் இருக்கும் சக்தி என்றால் அவர்களால் சிலையை கைப்பற்ற முடியவில்லை என்று என் அப்பா சொன்னார்.
அதிகாரி மோகினி மிகவும் குழப்பத்துடன் இது என்ன புது கதை என்று கூறி தன் குறிப்பேட்டில் மந்திரவாதியின் சேர்த்துக் கொண்டார். அது மட்டுமில்லாமல் தன் குறிப்பிட்டு தெரியாத நபரின் கைரேகைகள் என குறிப்பெடுத்துக் கொண்டார். சிலை எங்கே போயிருக்கும் யார் தான் எடுத்து இருப்பார்கள்?
வைஷ்ணவி நீங்கள் போங்க என மோகினி கூறிவிட்டு தன் சிந்தனையை மீண்டும் பலப்படுத்தினார்.
வைஷ்ணவி சொன்ன கதை உண்மையா ? சிலை எப்படி கிடைக்கும் யார் எடுத்திருப்பார்கள் ?எங்கே போனது? திருவிழா நடக்குமா?