பிருந்தாவன ஓசை

சிரிப்பொலிகளும், முரளி ஓசைகளுமென,
வாகானக் கிளைகளுடைய,
பூக்களுடைய,
நிறைய மரங்களை
அங்கே விட்டுவைத்திருக்கிறேன் ..
காற்றின் விசைக்கேற்ப
விரிந்துகொண்டே அவைப் போகின்றன ..
மரம் விட்டு மரம் தாவி
கிளைவிட்டுக் கிளைத்தாவி,
உங்கள் தேடல்களை, அவை ரசிக்கின்றன ...

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (28-Jul-18, 10:01 am)
பார்வை : 90

மேலே