அழகே உன்னை ஆராதிக்கிறேன்
செம்மாதுளைக் கனி
உன்னிதழில் துண்டாக
உடைவது கண்டேன்
நீ அன்றலர்ந்த
தாமரை மலர் போல்
முகம் மலர்ந்து
சிரித்த போது ,
உள்ளே நீ ஒழித்து வைத்த
வெண்பவழ முத்துக்கள்
நிலத்தில் சிந்துவதும் கண்டேன்
என் மனமும் எனைப்
புறந்தள்ளி விட்டு
உன்னை நோக்கி அக்கணமே
முந்துவதும் நான் கண்டேன்
அஷ்ரப் அலி