சுதந்திரம் இன்றும் ஒரு எட்டாக்கனியாகவே !

சுதந்திரம்
இன்றும் ஒரு எட்டாக்கனியாகவே!

சுதந்திரம் என்றாய்

சுதந்திரதினம் என்றாய்

சுதந்திரமாய் உலா வர தடை...

நாடெங்கும்
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்...

தங்கக்கூண்டில்
சிறைப்பட்ட சிறுபறவைகளாய்
மக்கள்..!

எங்கே...

சுதந்திரம் இதுவென்று இடம்சுட்டி பொருள்விளக்குப்பார்ப்போம் ?!

வானில்
சிறகடித்து பறக்கும்
சிறுபறவையிடம் கண்டேன்...

சின்னச்சின்ன குறும்புகள்செய்யும்
சிறு குழந்தையின்
அழுகையில் கண்டேன்...

சில்லென்று
கூலாங்கற்களுடன் உறவாடும்
நீரோடையில் கண்டேன்...

காற்றிடம் கவிப்பேசும்
மரங்களிடம் கண்டேன்...

தானே தேய்ந்து
தானே வளரும்
வெண்மதியிடம் கண்டேன்..

காணும் காட்சிகளெல்லாம்
சுதந்திரத்துடன் உறவாடும் போது...

ஏனோ என(நம)க்குமட்டும் ?!

இன்றும்
சுதந்திரம் ஒரு எட்டாக்கனியாகவே!

_ மகா

எழுதியவர் : மகா (17-Aug-11, 7:35 pm)
சேர்த்தது : maharajan
பார்வை : 307

மேலே