சாமத்து கள்வன் அவன்

அந்தி வேலையிலே...
பால் நிலவுடன் வலம் வந்த
கார்மேக வண்ணன் அவன்.........
கருஞ்சாந்து ஊற்றிய இரவும்
மூடி இல்லா அவன் முகத்தை
முகமூடி கள்ளனாய்.....
காட்டியது..... !!
மங்கலான அந்த முகத்திலே
அழகாய் பட படத்தது
அவனிரு நேத்திரங்கள்....!!
செவ்வரளி மாலை சூட்டி...
நிலவு சாட்சியென கரம்பற்றி
வலம் வந்தான்....
கார் குழலிலே
மல்லிகைச் சரம்
வைத்து....
என் பிறை நெற்றியிலே
மங்கள திலகமென...
உதிரத்தில் பொட்டு வைத்தான்...!!!
அழகாய் அள்ளி அணைத்த வேலையிலே.......
ஏனோ அவன்...
முகம் மட்டும்
கண்டிலேன்...
மெல்ல மெல்ல....
கன்னத்திலே....
இதழ் முத்தம் பதிக்க........
உணர்ந்தேன் இவன்
மீசை வைத்த
கருப்பு கண்ணன் என்று....!!!
நாணம் சூழ்ந்திட ......
கிழக்கும் வெளுத்திட..........
இமைகள் மலர்ந்து பார்க்கையிலே.....
புரிந்தது...!!!!!!!!!!!
மெல்ல மெல்ல முகம் மட்டும்
காட்டாமல் மறைந்த ........
.................அவன்..................
கனவில் மட்டுமே
காதலை சொல்லும்
சாமத்து கள்வன் என்று..... !!!

எழுதியவர் : லீலா லோகிசௌமி (31-Jul-18, 12:44 pm)
பார்வை : 249

மேலே