என்னவனே,எங்கு சென்றாய் நீ
என்னவனே, என்னவனே
ஒரே பார்வையில் உந்தன்
ஒரே ஒரு பார்வையாலே
நீதான் என்னவன் என்று
என்னை நினைக்கவைத்தாய் ,
என் மனதை திருடி சென்றுவிட்டாய்,
நீ, எங்கு சென்றாயோ தெரியலையே
ஆனால் என் உள்ளமோ உன்னிடம் ,
நீயோ என் மனதில் நின்றுவிட்டாய்
நிரந்தரமாய் காதலனாய் என்னவனாய்
நான் அறிவேன் நீ எங்கிருந்தாலும்
நான் உன் மனதில் ஊஞ்சலாடிடுவேன்
அதை பார்த்து நீ என்னை நாடி ஓடியே
வந்திடுவாய் என் மனதோடு சேர,
என்னை அணைத்து உடலாலும்
அந்த உணர்வில் காதல் இன்பம் பெறவே