குறிலொற்று வெண்பா -

குறிலொற்று வெண்பா :-

நிலவும் இரவினில் நிற்கக் கனவில்
உலவும் அழகி உறவில் -- பலவும்
சிலரும் இயம்பச் சிதறும் மனத்தில்
மலர்ந்த இதய மலர் .

பொருள் :-
இரவினில் நிலவு காவலுக்கு நிற்க கனவினில் உலவுகின்ற அழகியைப் பற்றிச் சிலர் பலவாறு இயம்பச் சிதறுகின்ற மனத்தினால் உருவான உறவில் மலர்ந்தது என் இதயம் எனும் மலர் .

குறிலொற்று வெண்பா :-

குமரன் வரவில் குலமும் விளங்கும்
கமலமும் கொண்டு கசிந்து -- நிமிடம்
இமயம் முழுதும் இடும்பன் அவனும்
வமிசம் சிறக்க வளம் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-Jul-18, 1:25 pm)
பார்வை : 67

மேலே