கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
நீ யார் என்று நான் அறியேன்,
நான் யார் என்று நீ அறியாய்,
நீ எனைப் பார்த்தாய் , நானும்
உனைப் பார்த்தேன்;
எனக்கு உன்னைப் பிடிக்க
அதை சொல்ல என் நா எழும்முன்,
என் பார்வையால் நீ அதை
தெரிந்துகொண்டாய்,உன்
இமைகளின் நளினத்தில் அதை
நானும் தெரிந்துகொண்டேன்,
நீ என்னை விரும்புகிறாய் என்பதை;
நாவால் பேசி நம் காதலை
தெரிவித்தால் அது காதுக்கு விருந்து
நம் பார்வையால், கண்களின்
அசைவுகளின் பரிமளப்பில்
ஒளி அசையால் நம் காதல்
மலர்ந்து இவ்வாறு மிளிர்வது
நம் இதயத்தை அல்லவோ தொடுகிறது
புரியாமல் வந்த சந்திப்பில்
பார்வையின் பரிமாற்றம்
உன்னை எனக்கும், என்னை உனக்கும்
புரியவைக்க ...............
அருகே இன்னும் வர என்ன தயக்கம் பெண்ணே
உனக்கேன் இன்னும் என்னை நெருங்க தயக்கம், ஏன்
இப்படித்தான் அவனும் அவளும் சிந்திக்க
மௌனமாய் வளர்ந்ததே அவர்கள் காதல்