பிசிலி குசிலி
![](https://eluthu.com/images/loading.gif)
ஏன்டா கண்ணுச்சாமி...
@@@@
சொல்லுங்க பாட்டி.
@@@@@
நாந்தான் வடக்க உங்க சித்தப்பா வீட்டுக்குப் போனவ ஒண்ணரை வருசம் கழிச்சு வந்திருக்கேன். உன்னோட மனைவி பொன்னிக்கு ரட்டைக் கொழந்தைங்க அதுவும் மகாலட்சுமிகளா பொறந்திருக்கிறத கேள்விப்பட்டேன். கொழந்தைங்க படத்தையாவது அனுப்பிருக்கலாமே.
@@@@
கொழந்தைங்கள படம் எடுக்கக்கூடாதுன்னு தாத்தா சொல்லிட்டாருங்க பாட்டிம்மா.
@@@@
கொழந்தைங்களுக்கு என்ன பேரு வச்சீங்க?
@@@@
வழக்கமா நம்ம தமிழ் சனங்க இந்திப் பேருங்களக் கொழந்தைங்களுக்கு வைக்கிற மாதிரி நாங்களும் இந்திப் பேருங்கள வச்சிட்டோம்.
@@@@
அது தெரிஞ்ச கதைதான்டா கண்ணுச்சாமி. கொழந்தைங்க பேருங்களச் சொல்லுடா.
😊😊😊😊😊
ஒரு இந்தித் தொடர்ல 'பிஜ்லி' ன்னு ஒரு கொழந்தையக் கூப்புடுவாங்க. அந்தப் பேர ஒரு கொழந்தைக்கு வச்சுட்டோம்.
@@@@@
பிசிலியா? சரி இன்னொரு கொழந்தை பேரு என்னடா?
😊😊😊😊
பிஜ்லிக்குப் பொருத்தமான பேரா தேடினோம். கெடைக்கல. அப்ப தாத்தா தான் 'குஜிலி'ன்னு வைக்கச் சொன்னாரு.
😊😊😊😊
அப்ப ரண்டாவது கொழந்தை பேரு குசிலியா. பிசிலி - குசிலி ....பேருங்க ரண்டும் பொருத்தமாத்தான்டா இருக்குது.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Bijli = lightning மின்னல்
Gujili = market place அங்காடி