டாசுமாக்கு போறவளா நீ

யாரடி அது? ஊருக்குப் புதுசா இருக்குது? எங்கிருந்து வந்த?
😊😊😊😊😊
பாட்டிம்மா நான் உங்க தெருவில இருக்கிற கடைசி வீட்டு உறவுக்காரப் பொண்ணு. சென்னையிலிருந்து
இந்த ஊர் திருவிழாவுக்கு வந்திருக்கிறேன்.
😊😊😊😊
ஓ....அந்த காளியப்பன் வீட்டுக்கு வந்திருக்கிறயா? சரி, சரி. உம் பேரு என்ன?
😊😊😊😊
பாட்டிம்மா, எம் பேரு மதுவந்தி.
😊😊😊😊
என்னது மது வந்தியா? பட்டணத்தில சில எளம் பொண்ணுங்க குடிப்பாங்கன்னு ஊத்துடீவியப் பாத்துட்டு எம் பேரஞ் சொன்னான். உம் பேரே எனக்குச் சந்தேகத்தைக் குடுக்குது. நீ டாசுமாக்குப் பக்கம் போற பொண்ணா?
😊😊😊😊
அய்யோ பாட்டிம்மா, எம் பேர வச்சு என்ன தப்பா நெனைக்காதீங்க. எங்க தாத்தா சுதந்திரப் போராட்ட வீரர். என்னோட அப்பா ராணுவ வீரர். எங்க குடும்பம் தியாகி குடும்பம். எங்க குடும்பப் பேரக் கெடுக்கிற மாதிரி தப்பான வேலையெல்லாம் நாஞ் செய்யமாட்டேன்.
😊😊😊😊
அப்பறம் எதுக்குடீ உனக்கு மது அந்தினு வச்சாங்க. அந்தி நேரத்தில மது குடிக்கிறவளா நீ?
😊😊😊😊
பாட்டிம்மா நம்ம தமிழர்கள் பெரும்பாலோர் அவுங்க பிள்ளைங்களுக்கு தமிழ்ப் பேர வைக்க வெக்கப்பட்டு இந்திப் பேருங்களத் தான் வைக்கிறாங்க. என்னோட அம்மா அப்பாவும் எனக்கு 'மதுவந்தி'-ன்னு இந்திப் பேர வச்சுட்டாங்க.
😊😊😊
அந்தப் பேருக்கு என்னடி அர்த்தம்
😊😊😊😊😊
'மதுவந்தி' -ன்னா 'தேன்' -னு அர்த்தம்.
😊😊😊😊
ஏன்டி தமிழ்ப் பேர வைக்கிறது கேவலமா? 'தேன்மொழி' -ன்னு வச்சிருந்தா உம் பேரக் கேக்கறவங்களுக்கு இனிமையா இருக்கும். அர்த்தமும் புரியும். எல்லாம் காலங் கெட்டுப்போச்சுடி.
■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க. தமிழுணர்வை வளர்க்க.