வாழ்வதன் அர்த்தம் ஏதடா மனிதா
பிடித்து தவழ்ந்து பிறழ்ந்து நடந்து
படித்து உயர்ந்து பதவியும் பெற்று
அடித்துக் கலைத்து அதிகமாய்ச் சேர்த்து
குடித்து வெறித்து கோலங்கள் செய்து
அடுத்துக் கெடுத்து ஆசைகள் தீர்த்து
பிடித்ததைச் செய்து பேரிறை உனக்கு
கொடுத்ததை எல்லாம் கொடுக்காமல் சேர்த்து
இல்லாரை வெறுத்து ஏழையை மிதித்து
உண்டு உடுத்து உலவிநீ ஈற்றில்
நோயாகிச் சருகாகி நோவாகி மடிவதா?
வாழ்க்கை மனிதாஉன் வாழ்க்கை இதுவா
போகும் இடத்துக்கு புண்ணியம் தேடு
வாழும் காலத்தே உன்பெயர் சொல்லும்
மனிதனாய் வாழு புனிதனாய் மாழு
அஷ்ரப் அலி