எனக்கானதொரு பாடல்
இரைச்சலின் நடுவில்
விழிகளின் ஒளியில்
நீ இசைக்கிறாய்
எனக்கானதொரு பாடலை.
புல்லாங்குழலின் மென்மையை விடவும்
மென்மையாய் எழுகின்ற அது
கேட்கபட்டுக் கொண்டிருக்கிறது என் கண்களால்
எல்லாம் உறைந்துபோன
ஒலிகள் இல்லா வெற்றிடமான
அந்த ஒரு கணத்தில்
உச்சத்தை தொடுகிறது
எனக்கான உனது பாடல்..