ஆடிப்பெருக்கு
ஆடிவா பெண்னே !
ஓடிவா பெண்னே !
காவேரி தாய்
ஆர்பறித்து வருகிறாள்
மூடர்களின் மூக்குடைத்து வருகிறாள்
அவளை அள்ளியனைத்து
முத்தமிடவேண்டமா
கொடியசைத்து
கோலவிழியாளை
கோவில்கொண்டு சேர்க்க வேண்டாமா
தமிழ் ! தமிழ் ! என்று
ததி சொல்லி வருகிறாள்
அவள் அழகில்
மதிமயங்க வேண்டாமோ
வாருங்கள் தமிழர்களே
அவளை வாழ்த்தி வரவேற்ப்போம்
கொட்டும் முரசு எங்கே ?
பட்டாடை உடுத்தி
பவனி வரும் அவள் பேரழகு
வாணம் கிழிக்க வல்ல
வாணவரின் பரை எங்கே ?
அச்சம் தவிர்த்து
உச்சம் தொட்ட நம்
ஆடவரின் வீர விளையாடுகள் எங்கே ?
நெஞ்சம் நிமித்தி
வஞ்சம் கலைந்து
வாணம் தொட்டு வருகிறாள்
ஆடிவா தமிழ் மகளே
ஓடிவா ……….
தமிழ் மண்ணை முத்தமிட்டு
தவழ்ந்துவா---------
காலகாலமாய்
காத்திருக்கிறான் தமிழன்
கைகூப்பி உன்னிடம்
யாசிக்கிறான் தமிழன்
என் தேசத்தில்
என்றும் தங்கிவிடு
உன்னை தாயாய்
மகளாய்
தமிழ் தெய்வமாய்
என்றென்றும்
போற்றுகிறோம்.............