அதோ அந்த பிறை நிலா
அதோ அந்த பிறை நிலா
வானத்தில் யாரோ எழுதிய
அரை குறை ஓவியமா ?!
இல்லை
திரிதியை துவிதியை
என்ற எண்ணிக்கையா ? இல்லை
இரவு பகல் என்ற
நாள் கணக்கா ? இல்லை
என் இதயக் கரங்களில்
எண்ணங்களை கவிதைகளை
அள்ளி வழங்கும்
அட்சய பாத்திரம் !