மனிதனை காணோம்

வின்னுலகே ஒரு கடவுளின் ஆட்சி
மண்ணுலகே அது மனிதனின் காட்சி
உயரத்திலே ஒரு ஆதியின் சக்தி
தாழ்ந்ததனால் அவர் ஆடவர் பெண்டிர்

விதையெனவே இங்கு விழுந்தவன் மனிதன்
விருட்சங்களாய் இன்று விரிந்ததை காணீர்
செடியெனவே முளைத்தவன் என் பாட்டன்
அதன் கிளைகளை போல் என் பரம்பரை காணீர்

உடல் படைத்து அதில் உயிரினை கொடுத்தான்
அதில் மதி படைத்து குரு மந்திரம் விதைத்தான்
சத்தியமே எனும் சாத்திரம் கொடுத்து
சமத்துவமே இங்கு சமநிலை என்றான்

உயிரினை படைத்தவன் இறைவனும் என்றால்
எனை சுமந்வள் என்னுயிர் தாயவள் அன்றோ...
பெற்றவள் என்பவள் தாயவள் என்றால்
எனை வளர்த்தவன் என்னுயிர் தந்தையும் அன்றோ...

சுற்றங்கள் என்பது சுவாசிக்கும் வரை
உறவுகள் என்பது ஊர்வலம் வரை
இணையவள் என்பது இல்லரம் வரை
பிள்ளைகள் என்பது கடைமையின் வரை

வாழ்க்கை என்றொரு சக்கரம் செய்து
பெரும் பாதை மேல் தினம் சுற்றிட செய்தான்
இன்பமும் துன்பமும் இயற்கைகளென்று
இதயம் துணிந்திட முயற்சியை வகுத்தான்

வெற்றியும் தோல்வியும் சரிசமம் என்று
இவை இரண்டையும் தாங்கிட இருதயம் படைத்தான்
லாபமும் நஷ்டமும் ஈட்டிடும் அன்பே
இதை அறிந்தவன் வாழ்வில் உத்தமன் என்றான்

அமைதியும் பொறுமையும் நல்லவையாகும்
கோபமும் வண்மமும் கோடுஞ்செயலாகும்
கல்வியும் ஞானமும் பெறுபவையாகும்
ஆசையும் மோகமும் அலைபவையாகும்

இயற்கையே உன்னுயிர் இருப்பிடமாகும்
அது இல்லையேல் இன்னுயிர் இறந்திட நேரும்
மண்ணுயிர் மானிடர் மறந்திட கூடும்
நீ மாய்ந்தபின் மண்ணுக்குள் உடல் மக்கிட தோன்றும்

உணவினால் தோன்றும் ஆற்றலை காணோம்
அந்த ஆற்றலில் அசைந்திடும் நரம்புகள் காணோம்
காற்றினால் இயங்கும் இருதயம் காணோம்
அந்த இதயம் பரவிடும் உதிரத்தை காணோம்
பார்வையின் வடிவினில் ஒளியினை காணோம்
அந்த ஒளியின் வடிவினில் நிறங்களை காணோம்
கடவுளும் மனிதனும் இணை எனக்காணோம்
மனிதன் வடிவினில் மனிதனை காணோம்...

இயற்கையின் நியதியில் தவறுகள் இல்லை
சாதிப்பெயரினில் சண்டைகள் ஏனோ..
உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பவர் இல்லை
இறைவனின் அடிமைகள் மனிதர்கள் என்போம்....

ச. அரிக்குமார்

எழுதியவர் : ச. அரிக்குமார் (3-Aug-18, 11:58 pm)
சேர்த்தது : ச அரிக்குமார்
Tanglish : manithanai kaanom
பார்வை : 148

மேலே