எனக்காக மலர்ந்த செந்தூரப்பூவே 555

என்னவளே..

நித்தம் பூத்து குலுங்கும் பூக்களை
பார்க்கும்போதெல்லாம்...

எனக்குள் சந்தோசம்
வந்தாலும்...

முதன்முதலில் மலர்ந்த பூக்கள்
கொடுத்த சந்தோசம் இல்லையடி...

எத்தனையோ பெண்களை
நான் பார்த்து இருந்தாலும்...

உன்னை பார்க்கும் போது வந்த
சந்தோசம் போல் வருமா...

எத்தனையோ பெண்கள்
உனக்கும் முன்பும் பின்பும்...

என்னை கடந்து சென்று
இருக்கிறார்கள்...

உன்னை கண்ட சந்தோசம்
போல் இல்லையடி...

காவியம்கூட
நான் எழுதிவிடுவேன்...

உன்னை பார்த்த முதல்
சந்திப்பை எப்படி எழுதுவேன்...

என்னுயிரே நீயே என்
வாழ்க்கையாக துணையாக வந்தால்...

என் வாழ்வும்
சொர்க்கம் கண்ணே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (4-Aug-18, 8:39 pm)
பார்வை : 254

மேலே