நீயே என்னி பாராடி
மந்திர கண்ணாலே என் மனசை உருக்குகிறாய்!
தந்திரம் செய்து என்னை தாயமாக உருட்டுகிறாய்!
பம்பர கண்ணாலே எனக்குள் பல்லாங்குழி ஆடுகிறாய்!
சாட்டை என வார்த்தை வீசி என் அங்கத்தில் சந்தம் ஆகுகிறாய்!
முத்து மொழி புன்னகையால் என் மூச்சை முட்டுகிறாய்!
பத்து மணி சங்கை போல எனக்குள் சங்கீதம் பாடுகிறாய்!
சுப்ரபாதமாய் உன் பெயரை தினமும் நான் உச்சரிக்கிறேன்!
சூறாவளியாய் வந்து என் நினைவில் உன்னை சுற்ற வைக்கிறாய்!