காதல் வாழவைக்கும் முரண்பாடுகள்

அவள் அழகி பேரழகி
அவள் சொல்வாள் என்னை
' 'உனக்கென்ன குறை, நீ
இதயத்தில் குன்றா எழிலன்'
அது எப்படியோ ,நான்
நிறத்தில் கார்மேகம்
அவளோ நிலவுமங்கை
குயிலின் இனிமை
அவள் குரலின் இனிமை
அவள் பேசும் தமிழின் இனிமை
என் திறமை என் எழுத்தில்........,
பேச்சில் நான் வெறும் கிளியோ ,,
அவள் சொல்வாள்'உன் எழுத்தில்
உலகமே உனைகாண்கிறதே 'என்பாள்,
அவள் நடை உடை பாவனை.......
என்னென்று சொல்வேன்............,
நடையில் அவள் அன்னமே,
பாவனையில் மேனகை ,
எனக்கோ நடையிலும் சிறு குறை,
அதற்கவள் சொல்வாள்'தங்கத்தில்
ஒரு குறை இருந்தாலும் தரத்தில்
குறை இல்லையே'கண்ணாளா என்று
எது எப்படியோ அவளும் நானும்
பார்வையில் சேர்ந்தோம் ,மனத்திலும்
உறுதியாய் ஒன்றுபட்டோம் ...
எங்களுக்குள் முரண்பாடுகள்
எத்தனையோ எத்தனையோ
அத்தனையும் தாண்டி நிற்கிறது
எங்கள் காதல்....
எது எப்படியோ, அவள் கண்ணிற்கு
இந்த நீலமேகனும் முழுநிலவாய்த்தான்
காட்சி தருகிறேனாம்.......அவள் சொன்னாள்;
எங்களை சேர்த்துவைத்தன முரண்பாடுகள்
வாழவைத்துக்கொண்டிருக்கின்றன...
'வாழ நினைத்தால் வாழலாம் .....
முரண்பாடுகளே நன்மை பயக்க!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Aug-18, 10:22 am)
பார்வை : 87

மேலே