நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
இணையங்களின் தொகுப்பில் இரு நாவல்
நம் நட்பு முக நூல் என்ற பதிப்பகத்தில்
யாவர்க்கும் இங்கே இணையும் போது
அறிமுகம் என்றென தெரியவில்லை
பிரி முகம் நமக்காய் அமைவதில்லை
சரி முகம் கண்டு இரு உயிரினை நட்பாய்
இணைத்தது இயற்கையை வாழ்த்த வார்த்தையில்லை
உன் நினைவுகளை தலையணை ஆக்கி
தலை வைத்து உறங்குகிறேன்
உன் அன்பை போர்வையாய் போர்த்தி
துயிலினை விரும்புகிறேன்
நீ பேசாத நாட்கள் என் நாட் குறிப்பில்
நான் பதிந்து கொள்வதில்லையடி
நீ இல்லாத நிமிடங்கள் என் வீட்டில்
கடிகாரங்கள் சூழல்வதும் இல்லை
சிலரின் குறுஞ்செய்தி சத்தங்கள்
நின்ற இதயத்தின் துடிப்பையும் இயக்கிவிடும்
உன் குறுஞ்செய்தி அப்படிதனடி
இயக்கி விடுகிறது காயங்களில்
நின்றுபோய்விடும் என் இதயத்தை
கடல் கடந்து இலங்கை கடல் தேசத்தில்
நன் எடுத்து முத்து நீயடி சபி
இதயங்கள் நின்றாலும் விழிகளுக்கு சில மணித்துளிகள்
பார்வை எதற்கு தெரியுமாஒரு முறை கூட காணாத
பிரியாமானவர்களை ஒரு முறையேனும் சந்திப்பதற்குத்தான்.....
உன்னை அப்படியாது காண்பேனனோ .....
அடிக்கடி ஆராய்கிறேன் அருகில் இல்லாத போதும்
உன் புரிதல் சாத்தியம் சத்தியம் புரியவில்லையடி......
அறிவியலின் புரிதலிலும் அன்பிற்கு சூத்திரம் இல்லையடி
அகிலமே கூடினாலும் நம் நட்பிற்கு மாத்திரம் பிரிதலும் இல்லையடி
அன்பு தோழியே சபரினா எழுத்துக்களும் தீராது உன்னைப்பற்றி
எழுதினால் நீண்டு கொண்டேனா தான் இருக்கும்
எல்லை இல்லா நம் நட்பிற்கு ஒரு திருநாள்
இந்த நண்பர்கள் தினம் என்பேன்
இனிய நண்பர்கள் தின நாள் வாழ்த்துக்கள் சபரினா..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
