நட்பு
வரையறைக்குள்
அடங்காவொன்று
திகட்டாவொன்று
அன்பு கொள்ளும்
ஆறுதல் கூறும்
கோபம் கொள்ளும்
சில சமயம் பொறாமையும்
கொள்ளும் தன்னை
மிஞ்சிய உறவோயென்று
அதுவும் ஒருவித அன்பு தானே
எளிதில் கிடைத்திடாது
தொட்டால் விடாது
விட்டுவிடவும் முடியாது
பலருக்கு இன்பம்
சிலருக்கு மட்டும் துரோகம்
மறுக்கவும் முடியாது
அனைத்தும் கலந்தது
தானே வாழ்க்கை
எங்கிருந்தோ வரும்
குடும்பத்தில் ஒருவராகும்
சிலருக்கு குடும்பமாகவும்
மாறும் தவறேதுமில்லை
எந்த பங்கமும் இல்லை
விதிகளை மீறிடும்
முரண்களை அகற்றிடும்
சிலருக்கு வாழ்வாகும்
சிலருக்கு உயிராகும்
எதிர்பாராது ஆனால்
பூர்த்தி செய்யும்
அதுதான் நட்பு
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நட்புகளே