என் நண்பன் என் தெய்வம்

மனைவியை மறந்து
பிள்ளைகளையும் மறந்து
வீட்டின் நினைவுகூட இல்லாது
இரவும் பகலும் டாஸ்மாக்
ஒன்றே கதியென்று
அங்கேயே தவமிருந்து
மது வெள்ளத்தில் முக்கி
மூழ்கி தத்தளித்திருந்த
நண்பன் என்னை
ஒரு நிலைக்கு கொண்டுவர
வாழ்வில் என்னை கடைத்தேத்தி
இன்று டாஸ்மாக் என்றாலே
முழுவதுமாய் வெறுக்க வைத்து
மது அருந்துவதையும் முழுக்க
துறக்கவைத்து என்னை ஒரு
முழு மனிதனாய் என்
குடும்பத்திடம் ஒப்படைத்தான்
மூழ்க இருந்த கப்பலை
நிலைக்கவைத்து மீண்டும்
கடலில் ஓட செய்த ஓர்
ஒப்பற்ற மாலுமியைப்போல்
இத்தனையும் எனக்காக
செய்த ஒப்பற்ற தியாகியல்லவோ
இவன், என் நண்பன்
நட்பின் இலக்கணம் இவன்
இவனுக்கு என்னால் ஒரு
கைமாறும் செய்ய முடியாது
இவனுக்கு என் கடன்
அடைக்கவே முடியாதது
குபேரனிடம் மாலின்
கடனால் , இதை நானே
அவனிடம் கூற, அவன்
சொன்னான்' நீ எனக்கோர்
கைம்மாறு செய்ய நினைத்தால்
அது இதுதான், இந்த மீண்ட
வாழ்வை இனி இழந்துவிடாதே
என் நண்பனே, ஏனென்றால்
அதை மீண்டும் தர நான்
...........என்றான்..., அவன்
வாயை நான் மூட........
அவன் கண்ணீரில் நான் நனைய
என் கண்ணீரில் அவன்.............

இன்று நாங்கள் இருவருமே
இன்புறும் நன்னாள்
இதோ இருவருமே எங்கள்
சக குடும்பத்துடன் ............
உல்லாச பயணத்தில் ஊட்டிக்கு...
இருவரும் இந்நாளில் ஒருவரை ஒருவர்
பரஸ்பரம் வாழ்த்திக்கொண்டு,
என் வீட்டிற்கு அவன் வைத்த பெயர்
'மீண்ட சுவர்க்கம்,' என் நண்பன்
என் தெய்வம்.
.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Aug-18, 4:15 pm)
பார்வை : 358

மேலே