முத்து நகர் முத்து
ஆகஸ்ட் பதினைந்து.. அது
இந்தியா மகிழும் நாள்...
ஆகஸ்ட் ஐந்து.. அது சங்கரி
பெற்றோர் மகிழும் நாள்...
முத்து ஒன்று கெத்தாகப்
பிறந்த நாள்...
சங்கம் அமைத்து
செந்தமிழ் வளர்த்தனர்
சங்கப் புலவர்கள்...
சங்கரி பெற்று
தங்கமாய் வளர்த்தனர்
இவர்தம் பெற்றோர்...
குன்னூர் குறிஞ்சி நிலம்
வாழ்ந்த இந்த குறிஞ்சிமலர்
இன்று நெய்தல் நிலம் வாழ்கிறது...
அன்பைப் பெய்தல் குணமாய்க் கொண்டு..
தமிழும் ஆங்கிலமும்
சங்கரிக்கு அத்துபடி...
நட்பைப் பேணுவதில்
மேலும் பல படி...
செயலாற்றுவதில்
நினைத்தது நினைத்தபடி.. இதை
இங்கு சொல்லியாக வேண்டும்
உள்ளதை உள்ளபடி...
பாட்டுக்கொரு புலவன்
பாரதி மகிழ்ந்திருப்பான்
இன்றிருந்தால்... இந்த
புதுமைப் பெண்ணைக் கண்டு...
மேலும் எழுதியிருப்பான் சிலவரி...
அதில் தெரியும் சங்கரியின் முகவரி...
திருநெல்வேலி அரசு
பொறியியல் கல்லூரி
மூக்கின் மேல் விரல்
வைத்திருந்தது...
மாணவியரை மாணவருக்கு
இணையாய் இவர் வழி
நடத்திய அழகைப் பார்த்து...
திரு திருமலையோடு
மண வாழ்வில் இணைந்ததால்
திருமலை போல்
இவர் இன்னும் உயரமாய்த்
தெரிகிறார்...
கண் அவராய் கணவர் திருமலை
யாழினியாய் மகள் யாமினி
பண்பில் சிறந்த மருமகன் செந்தில்
இனிமை சேர்க்க உலாவரும் மிருதுளா...
மனம் நிறை வாழ்வு என்றும்
வளர்பிறையாய் வளர்ந்து
வாழ்ந்திட தோழி சங்கரிக்கு
வசந்த வாழ்த்துக்கள்...
நிலையான குன்னூர் குளிராய்...
குலையாத அழகு தமிழாய்.. ஓயாத
முத்து நகர் கடலலையாய்...
முத்து இவர் வளமுடன்
என்றும் வாழ்ந்திருக்க...
இனிய வாழ்த்துக்களோடு நண்பன்...
இரா. சுந்தரராஜன்.
😀👍🍰🎂👏