அழைப்பது நீயோ என்று

உந்தன் ஞாபகங்கள் மட்டும் இல்லையென்றால்,
எப்பொழுதோ முடிந்திருக்கும் என் ஜீவனின் அத்தியாயம்!

பார்த்து கழித்த பொழுதுகள்!
பாடும் பறவை உன்,
நினைவை சுமந்து கழித்த பொழுதுகள்!
என தினமும் நாட்களை கடத்தி கொண்டு இருக்கிறேன்!

காந்தமில்லா திசைகாட்டி போல உன் இருப்பிடம் தெரியாமல் என் இருதயம் தவிக்கிறது!

தெரியாத எண்ணிலிருந்து அலைபேசி மணி அடிக்கும் போதெல்லாம்,
என் இதயதுடிப்பு இருமடங்கு எகிருதடி!
அழைப்பில் இருப்பது நீயோ என்று!!!

எழுதியவர் : சுதாவி (6-Aug-18, 2:43 pm)
சேர்த்தது : சுதாவி
பார்வை : 151

மேலே