உதயம் என்னும் கவி அரங்கம்


நீல வான மேடையில்
இயற்கை தேவியின்
காலைப்பொழுது எனும்
கவிதை அரங்கேறுகிறது

தேன் சிந்தும் மலர்கள்
தென்றலுடன் வாழ்த்துப்
பாடுகிறது

ஆரஞ்சு வண்ணப் பொன்னாடை
போர்த்தி காலை கதிரவன்
தலைமை உரை நிகழ்த்த
எழுகிறான்

மனிதர்களெல்லாம்
கரவொலி செய்தல்ல
கரம் கூப்பி வரவேற்று
நிற்கிறார்

உதயம் எனும்
கவி அரங்கம்
ஒவ்வொரு நாளும்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Aug-11, 8:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 392

மேலே