மானுடம் எனும் மலர் விரிப்பு
பார்க்கும் விழிகள் உண்டு
பார்க்க ஒளியில்லை
உதவும் கரமாக
வெள்ளை தடி உண்டு
ஒவ்வொரு மூலையிலும்
மனித மனம் உண்டு
நாங்கள் நடக்கும் பாதையில்
வெளிச்சம் இல்லை
ஆனால்
மானுடம் எனும்
மலர் விரிப்பு உண்டு
---கவின் சாரலன்

